வீழ்த்தியவர்கள் வீழ்கின்றார்கள்! விரைந்து விழிக்குமா முஸ்லிம் உலகம்?

கடந்த சில நாட்களாக ஊடகத்தில் அடிபடும் செய்திகள் பெரும்பாலும் அமெரிக்காவை பற்றியதாகவே உள்ளது. காரணம், அந்நாட்டின் பொருளாதாரம் அகலபாதாலத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டு உள்ளது. அதேசமயம், கடந்த 2001 வருடமும் இதே அமெரிக்கா, ஊடகத்தில் பெரும்பாலும் முன்னிலை படுத்தப்பட்டது. காரணம், அந்நாட்டின் ரெட்டைக்கோபுரம் தகர்க்கப்பட்டதின் எதிரொலி!!. சரி, இந்த இரண்டிற்கும் தற்போது என்ன வந்தது என்று நீங்கள் நினைக்கலாம்!. நிச்சயம் தொடர்பு உள்ளது. அந்நாட்டின் ரெட்டைகோபுரத்தை முஸ்லிம்கள்தான் தாக்கினார்கள் என்று முஸ்லிம் நாடுகளை பந்தாடியது அமெரிக்கா. இதில் நேரடியாக யுத்தம் மூலம் பாதிக்கப்பட்டது ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தான். மறைமுகமாக பாதித்துக்கொண்டிருக்கும் நாடுகள் பிலிப்பைன்ஸ் (முஸ்லிம்கள்) மற்றும் பாகிஸ்தான். ஆனால் தன் நாட்டிற்கும் ஏதாவது வந்திடுமோ என்று பயந்தே சரணம் சரணம் கச்சாமி பாடிக்கொண்டிருப்பது பல இஸ்லாமிய நாடுகள்! ஒரு கட்டிடத்தை இழந்ததற்கு கோபம்கொண்ட நாடு, இன்று தன் நாட்டின் பொருளாதாரத்தையே ஒட்டுமொத்தமாக இழக்கும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. ஒசாமா பின்லேடனை ஒழித்துக்கட்ட அமெரிக...